search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரையாண்டு தேர்வு"

    பிளஸ்-1 வேதியியல் வினாத்தாளை இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #HalfYearly #PlusOne #ChemistryQuestion
    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது.

    இந்த ஆண்டு பிளஸ்-1 புதிய பாடத்திட்டம் என்பதால் தமிழகத்தில் ஒரே மாதிரியான கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. பிளஸ்-2-க்கும் அரையாண்டு தேர்வு தற்போது நடைபெற்றது.

    இதில் சமீபத்தில் நடந்த உயிரியல் கேள்வித்தாள் இணைய தளத்தில் வெளியானது. இந்த வினாத்தாளும், தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாளும் ஒரே மாதிரி இருந்ததாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



    இந்த நிலையில் பிளஸ்-1 வேதியியல் தேர்வு இன்று நடைபெறுகிறது. ஆனால் நேற்றே இந்த தேர்விற்கான கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியானது. இதை மாணவ-மாணவிகள் டவுன்லோடு செய்தனர்.

    அரசு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதேபோல் பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 இடங்களில் கேள்வித்தாள் மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு நடைபெறும் அன்று காலையில் தான் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வந்து கேள்வித்தாளை பெற்று செல்வார்கள். ஆனால் அதையும் மீறி இன்று நடைபெறும் வேதியியல் கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியான சம்பவம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிளஸ்-1 வேதியியல் கேள்வி வினாத்தாளை இணையதளத்தில் வெளியிட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், வேதியியல் கேள்வித்தாளை இணைய தளத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். #HalfYearly #PlusOne #ChemistryQuestion

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். #Sengottaiyan #GajaCyclone
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் குருமந்தூர் மேட்டில் நம்பியூர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி அரசு உதவி பெறும் வைர விழா பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சைக்கிள்கள் வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகளில் இதுவரை பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் அரையாண்டு தேர்வை தள்ளி வைப்பதில் சிரமம் உள்ளதாக துறை ரீதியாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    புதிய பாடத்திட்டத்தில் வரலாறு பாடத்தில் ஆங்கிலேயர்களின் பெருமை அதிகம் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரலாற்றை பொருத்தவரை தேசிய தலைவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் போன்றவர்களுடைய வரலாறும் இடம் பெற்றுள்ளது.

    ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து மற்றொரு கல்வி மாவட்டத்திற்கு பொதுத் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. கல்வி மாவட்டங்கள் வேறாக இருந்தாலும் மதிப்பெண்கள் வழங்குவதில் எந்த குறைபாடும் இருக்காது.


    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டிவனத்தில் தரமற்ற சைக்கிள்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஜனவரி 1-ந் தேதி முதல் பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #HalfYearlyExam #GajaCyclone
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என்றும் ரத்தாக வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterSengottaiyan
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்.பி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடைபெறும். ரத்தாக வாய்ப்பு இல்லை.


    மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் 84 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசு பரிசீலனை செய்தால் அதற்கான நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ளும்.


    டெல்டா மாவட்டங்களில் முழுமையான பாதிப்புள்ளாகிய மாணவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கலாம் என முதல்- அமைச்சரிடம் ஆலோசித்து பின்னர் நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterSengottaiyan
    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #SSLC #HSC #ExamTimeTable
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #SSLC #HSC #ExamTimeTable

    2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த அட்டவணை வருமாறு:-

    எஸ்.எஸ்.எல்.சி.

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்

    13-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்

    18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்

    19-ந் தேதி (புதன்கிழமை) - அறிவியல்

    22-ந் தேதி (சனிக்கிழமை) - சமூக அறிவியல்

    பிளஸ்-1

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

    12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் அண்ட் டைட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி).

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி.

    19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

    22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்.

    பிளஸ்-2

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

    12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசியன் அண்ட் டைட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (பொது).

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

    19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.

    22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

    மேற்சொன்ன அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 
    ×